Tuesday, December 06, 2011

Arc Worldwide Srilankaவின் 2 நாள் பயிற்சிப் பட்டறை


லியோபேணட் சொலூசன்ஸ் இங்க் குழுமத்தின் ஓர் அங்கமான ஆர்க் வேர்ள்வைட் ஸ்ரீ லங்கா அண்மையில் 2012 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய இரண்டு நாள் வெளிப்புற பயிற்சிப்பட்டறையை நடத்தியது.

Leo Burnett and Arc Worldwide (www.leoburnett.com) gw;wp
Leo Burnett Company, Incy Leo Burnett brand நிறுவனம் மற்றும் சந்தைப்படுத்தல் பங்காளர்களான Arc Worldwide என்பன உள்ளடங்கியுள்ளன. இது உலகின் மிகப் பாரிய நிறுவன வலையமைப்பாகவும், உலகின் நான்காது மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Publicis Groupe (www.publicisgroupe.com) இன் துணை நிறுவனமாகவும் உள்ளது. தமது உபாய சிந்தனை, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறன் எண்ணங்களில் மக்களை பிரதான இடத்தில் வைத்துள்ளது. விளம்பரத்திற்கான கதையினை வெளிப்படுத்துவதற்கு முயற்சிப்பதற்கு முன்னர் மனித நடத்தைக்கு முதன்மையான கவனத்தை Leo Burnett வழங்கி வருகின்றது.

இந்த அணுகுமுறையின் ஊடாக தம்மை நாடிவரும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்து வருகின்றது. வெகுசன விளம்பரம் மற்றும் எண்ணிய, பிராசர மற்றும் சில்லறை சந்தை என்பவற்றின் நிபுணத்துவத்துடன், முக்கியமான வாடிக்கையாளர்களாயன The Coca-Cola Company, Diageo, Kellogg, McDonald’s, Procter & Gamble, Samsung, Leo Burnett கைகோர்த்துள்ளது.

ஏனைய நிறுவனங்களிலும் பார்க்க அதிக பயனுறுதித் தன்மை வாய்ந்த பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலம் பல விளம்பர விருதுகளை நிறுவனம் வென்றுள்ளது. கடந்த 6 வருடங்களாக ஐக்கிய அமெரிக்காவின்சந்தைப்படுத்தலில் முன்னோடி என்ற மகுடத்தை தாங்கி வருகின்றது. அத்துடன், தொடர்ச்சியாக உலகின் முதன்மையான ஆக்கத்திறன் விருது பெறும் வலையமைப்புக்களில் முதல் 5 இடங்களில் தமது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment