Thursday, December 01, 2011

புதுசா புதுசா ஈயடிச்சான் வெப்சைட்டுகள்


என்ன கனநாளான காண இல்லையெண்டு தேடினீங்களே...! நானும் அங்கயும் இங்கயும் ஓடித்திரியிர மனிசன்தானே. இருந்தாலும் துருவத்துல சேதி சொல்லுறத விடமாட்டன் கண்டியளே. ஒங்களுக்கு ஒரு முசுப்பாத்தி தெரியுமே? இப்ப யாழ்ப்பாணத்துல முழு சுதந்திரம் கிடச்சிட்டுதாம். அத்தோட அறிவும் கூடிட்டாம் எண்டு சொல்லுறாங்க. உண்மையோ தெரியல. 

இப்ப புதுசு புதுசா தமிழ் வெப்சைட்டுகள் எல்லாம் முளைக்குது. அது நல்ல விசயம்தான். ஆனா, அந்த எல்லா வெப்சைட்டுகளும் ஒரே மாதிரித்தானே இரிக்கி. ஒருவர் எங்கேயாவது இருந்து கொப்பியடிப்பார். அத உடனே குஞ்சு, குறுமணியான் எல்லாம் கொப்பி-பேஸ்ட் பண்ணி தள்ளுவினம். அதுல என்ன விசயம் இரிக்கி, அது யார் எழுதின நியூஸ், இது உண்மையா, பொய்யா எண்டு யோசிக்கிறதே இல்ல. தலைப்பைக்கூட மாத்துறதே இல்லலையெண்டா பாருங்களேன்.

உங்க எல்லோருமே தெரியும், வந்து கொஞ்ச நாள்ளேயே பேமஸ் ஆன வெப்சைட்டு என்டா, நம்மட துருவம்தான். காரணம் அதின்ட தனித்துவம்தான். சொந்தமாகவும், முந்திட்டும் செய்தியைப் போடுறதுதான் துருவம். இப்ப பல ஈயடிச்சான் வெப்சைட்டுகள் துருவத்திலதான் தங்கிட்டு இரிக்கி தெரியுமே...?

நம்ம ஒரு நீயுஸை போட்டா அத உடனே சுட்டுட்டு, அந்த படத்தில துருவம் பெயரை அழி்ச்சிட்டு அவங்கட பெயரை அடிக்கிறாங்கள். ஒருநாளைக்கு ஒரு நியுஸாவது சொந்தமா போடுறாங்களா எண்டா அதுவும் இல்ல. சொந்தப் புத்தியும் இல்ல சுயபுத்தியும் இல்ல. துருவம் இணையத்தளத்துக்கு பிரத்தியேகமான தெரிவிக்கும் செய்திகளை அப்படியே கொப்பி பண்ணி அவங்க வெப்சைட்டுல "துருவம் இணையத்தளத்துக்குப் பிரத்தியேகமாகத் தெரிவித்தார்" எண்டு போடுறாங்கள். பேனா பிடிக்கத் தெரியாதவங்கள் எல்லாம் வெப்சைட்டு நடத்த வந்தா இப்படித்தான்.

ஒரு நியூஸ் வெப்சைட்டு நடத்துறதுக்கு அடிப்படைத் தகுதிகூட இல்லாதவர்கள் இப்படி பம்மாத்துக் காட்டுகிறார்கள். ஒரு நியூஸ் எடுக்கிறதுக்கு உண்டான கஷ்டம் அவங்களக்குத் தெரியுறதில்ல. சும்மா ஒரு இடத்தில இருந்திட்டு அங்கயும், இங்கயும் இரிக்கிற நியூஸ்கள சுட்டு ஒரு வெப்சைட்டாம். துருவம் செய்தியாளர்கள் அனுப்புற செய்தியை சுட்டு அவங்கட பெயரை அழி்ச்சிட்டு போடுறாங்க. "நன்றி: துருவம்" என்கிற அடிப்படைகூட தெரியல அவங்களுக்கு.

இந்த வெப்சைட்டுகள் எல்லாம் நல்லதொரு செய்தித் திரட்டி. எல்லா வெப்சைட்டுல வாற நியூஸையும் இவங்கட சைட்டுல போய் பார்க்கலாம்.

- இப்படிக்கு மண்டு வாத்தியார்

0 comments:

Post a Comment