Friday, December 02, 2011

கிழக்கு மாகாண புதிய தபால் அலுவலர்


(ஏ.ஜே.எம். ஹனீபா) 
சம்மாந்துறை வீரமுனையை சேர்ந்த மதன சேகரம் தம்பி ஐயா என்பவர் இலங்கை தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தமது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு
பிரதி தபால் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய தபால் அத்தியட்சகர்  அலுவலகப்பிரிவுகளுக்கான நுண்ணாய்வு பரிசோதகராக கடமையாற்றிவந்துள்ள அதேசமயம் தமது கடமைக்கு மேலதிகமாக இந்நியமணம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1981ஆம் ஆண்டு தபாலதிபராக இணைந்து கொண்ட இவர் சம்மாந்துறை, கல்முனை ஆகிய தபாலகங்களின் பிரதம தபாலதிபராகவும்  1994ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு தபாலதிபர்கள் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியராக கடமையாற்றியுள்ளார் என்பதுடன் இவர் ஒரு உயர் தேசிய கணக்கியல் பட்டதாரியாவார்.

0 comments:

Post a Comment