(எஸ்.எல். மன்சூர்)
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற மாபெரும் கண்காட்சியும், பண்பாட்டுவிழாவும் இன்றுடன் முடிவடைகிறது. இன்றுடன் 4ஆவது நாளாக இக்கண்காட்சி நடைபெறுகின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக பூங்கா சனத்திரளாக காட்சியளிக்கின்றது. பெருந்திரளான மக்கள் இக்கண்காட்சிகளை பார்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பொதுமக்கள் இதனைப் பார்வையிட வருகை தந்துள்ளதனர். கடந்த நாட்களைவிட இன்று அதிகமான மக்கள் பார்வையிட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்தார். மிகவும் பிரமாண்டமான முறையில் பல்கலைக்கழக மாணவர் பேரவை ஒழுங்கு செய்திருந்த இந்த நிகழ்வுகளை இன்னும் ஒரிரு தினங்களுக்கு நீடிப்பது பற்றியும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இன்னும் முடிவாகவில்லை. இக்கண்காட்சிகளை பார்வையிடுவதற்கு வானிலைகூட மிகவும் தெளிவாக இருந்தது மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று காட்சிகளைப் பார்வையிடக் கூடியதாக இருந்தது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான கேலிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் பயன்பெறக் கூடியவாறு, கல்வியோடும், கற்றலோடும் சமுதாயத்தின் உயர்வுக்கு வழிகாட்டுகின்ற அறிவியல் சார்ந்த முறைகளில் அமையத்தக்கவாறான பல காட்சிக் கூடங்களையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.





0 comments:
Post a Comment