(எஸ்எம்.அறூஸ், எப்.எம்.முர்தளா)
அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சிப்பட்டறை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க பேரவையின் அட்டாளைச்சேனைக் கிளையின் தலைவர் யூ.எல்.எம்.நியாஸ் மௌலவி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான சமூக செயற்பாட்டாளர் எம்.என்.எம்.நபீல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் வளவாளர்களாக தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எம்.எச்.சாஜஹான், கல்வி உளவளத் துனையாளர் சிஹார் ஹசன் ஆகியோர் கலந்து விரிவுரை வழங்கினர்.
இறுதியில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment