(புத்தளம்செய்தியாளர்) ஹொல்ஸிம் அனுசரணையில் நடாத்தப்பட்ட 2011 மேஸன்மார்களுக்கான உதைப்பந்தாட்டசுற்றுப் போட்டியில் புத்தளம் மாவட்ட ஹெட்பாஸ் அணிசெம்பியனாகியது. இந்த அணி நேற்று முன்தினம் 7ஆம் திகதி ஒரு வார காலசுற்றுலாவை மேற்கொண்டு இந்தோனேஷியா பயணமாகியது. புத்தளம் மாவட்டஹெட்பாஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியரும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன இளைஞர் அபிவிருத்திஇணைப்பாளருமான எம். எப். எம். ஹுமாயூன் நியமிக்கப்பட்டுள்ளார். புத்தளம்மாவட்ட ஹெட்பாஸ் அணி இந்தோனேஷியாவில் சினேகபூர்வமாக போட்டிகளில்விளையாடவுள்ளதாக ஹுமாயூன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment