
இந்தோனேஷியாவில் நடைபெறும் பாலி ஜனநாயக மாநாட்டு அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்திருந்த பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோநேஷியா ஜனாதிபதி சுசிலோ பங்பம் கட்டார் பிரதமர் ஷேக் ஹமாத் பின் ஜஸிம் பின் ஜபார் அல் தானி மற்றும் புருனை சுல்தான் ஹஸன் அல் பொல்கியான் மன்னருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக கலாசார நட்புறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment