
( புத்தளம் செய்தியாளர் )
புத்தளம் நகர சபை சுயேட்சை குழு 8 (பந்து சின்னம்) உறுப்பினர்கள் இது வரை ஆறு பேர் தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். புத்தளம் நகர சபைக்கு சுயேட்சை குழு 8 சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகினர். ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க் கட்சியாக அவ்விரு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
எம்.ஏ.ஆர்.எம். ஜப்ரிஸ், எம்.ஐ.எம். இஸ்னாத் இருவரும் முதல் இரு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் இவ்விருவரும் சபை கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். இருவரின் இராஜினாமாவைத் தொடர்ந்து எம்.எச்.எம். பர்ஸின், எம்.ஏ.கியாஸ் இருவரும் உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். அவர்களின் இராஜினாமாவைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எம். ஹஸிபுல்லாஹ், எம். எஸ்.எம். நவ்பி இருவரும் பதவி ஏற்றதும் அவர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து விட்டனர்.
இவ்வாறு புத்தளம் நகர சபை சுயேட்சை குழு 8யைச் சேர்ந்த நகரசபை உறுப்பினர்கள் ஆறு பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். எம். எச். எம். பர்ஸின், எம். ஏ. கியாஸ், எஸ். எஸ். எம். ஹஸிபுல்லாஹ் , எம். எஸ். எம். நவ்பி ஆகிய நால்வரும் எந்தவொரு சபை கூட்டங்களிலும் பங்கு பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உறுப்பினர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக புத்தளம் நகர சபை சுயேட்சை குழு 8இன் தலைவர் எம்.ஏ.ஆர்.எம். இனாமுல் ஹஸன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment