Tuesday, December 27, 2011

இலங்கையில் தென்னாசிய இளைஞர் சமாதான மாநாடு


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென் ஆசிய இளைஞர் சமாதான மாநாடு கடந்த 20ஆம் தகதி முதல் 24ஆம் திகதி வரை நீர்கொழும்பு டொன் பொஸ்கோ கல்லூரியில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இப்படியான பிரந்திய இளைஞர் மாநாடு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். இந்த சமாதான மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் தங்களது நாட்டு நிலைவரம் அங்கு இடம்பெறும் இளைஞர்களுக்கிடையிலான பரஸ்பர கலந்;துரையாடல் பற்றியும் எடுத்துரைத்தனர்

இதேவேளை இங்கு கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் விதத்தில் நத்தார் தாத்தா வேடம் பூண்டு கலந்து கொண்டவர்களை பரவசப்படுத்தினர். குலைகலாசார நிகழ்வுகள் ஒவ்வெரு நாட்டு இளைஞர்களால் மேடையேற்றப்பட்டமை இங்கு விசேட அம்சமாகும் 

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. மன்றத்தின் தலைவர் தனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.










0 comments:

Post a Comment