Tuesday, December 27, 2011

'தினமின' பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு பாராட்டு விழா


தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த அபேசுந்தர ஊடகத்துறையில் 50 வருடங்களை பூர்த்தியாவதை முன்னிட்டு மாத்தறை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பு அண்மையில் பாரட்டு நிகழ்வு ஒன்றை மாத்தறையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய, மாத்தறை மாநகர முதல்வர் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியபீடப்பணிப்பாளர் மற்றும் ஊடகவியயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மஹிந்த அபேசுந்தரவின் ஊடகத்துறை பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும் அங்கு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment