Thursday, December 22, 2011

வெள்ளிக்கிழமை காலை நியுசிலாந்தில் நிலநடுக்கம்


(சம்யா) 
இன்று காலை வெள்ளிக்கிழமை நியுசிலாந்து நாட்டின் கிறிஸ்ந்சேர்ச் எனும் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. 5.8 ரிச்டர் அளவு கொண்ட இந்த பூமியதிர்ச்சியின் காரணமாக பலர் இறந்திருக்கலாம் எனவும் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை முதலாவது பூமியதிர்ச்சி ஏற்பட்டு சுமர் ஒன்றரை மணித்தியாலயங்களின் பின்னரும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் உலகின் அநேக நாடுகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக இந்தியா, பிலிப்பைன் உள்ளிட்ட ஐரோப்பி நாடுகளிலும் அதிக மழையும், பணிப்பொழிவுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலும் இதேகாலப்பகுதியான 2004டிசம்பர் 26ஆம் திகதி 9.0 ரிச்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் இந்தோனேசியா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டதால் அது இலங்கையிலும் சுனாமி கடள் கோள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தும், இலட்சக்கணக்கார் பாதிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். 

0 comments:

Post a Comment