Thursday, December 22, 2011

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


(எஸ். எல். மன்சூர்) 
அம்பாரை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இன்று அதிகாலையிலிருந்து இடைவெளியின்றி தொடர் மழை பெய்துவருவதால் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வயல் வெளிகளும், சிறிய சிறிய குளங்கள் மற்றும் ஆறுகள் போன்றனவும் நிரம்பிவழிகின்றன. அனைத்து உள்ளுர் வீதிகளும் நிரம்பியுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் ஜூம்ஆ கடமைக்காக பள்ளிக்கு செல்லவும் முடியாத நிலை தோன்றியுள்ளது. 

தொடர்மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. அதேவேளை கொழும்பு, கண்டி உட்பட நாட்டின் நாலாபுறங்களிலும் இருண்ட நிலையில் பனிப்புகார் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பணிப்பொழிவு இலங்கையின் இருள் சூழ்ந்த நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டின் தேசிய பாதுகாப்பு தினம் காத்தான்குடியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருக்கிறது. தொடர் மழை தொடர்வதால் ஏனைய பிரதேசங்களில் நடைபெறவிருக்கின்ற தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவு தினங்களிலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment