நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உலக எயிட்ஸ் தின நிகழ்வையிட்டு இன்று முற்பகல் எயிட்ஸ் ஒழிப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியபடி சிறைச்சாலையின் வெளிப்பகுதியைச் சுற்றி ஊர்வலமாக சென்றனர். உலக எயிட்ஸ் தினத்தையிட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பாக கைதிகளுக்கு விழிப்புட்டும் நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிமுதல் நடத்தப்பட்டது. இதன் ஒரு அங்கமாகவே எயிட்ஸ் கவனயீர்ப்பு ஊர்வலம் இடம்
பெற்றது.
இதனை நீர்கொழும்பு கைதிகள் நலன்புரி சங்கம் நீர்கொழும்பு சிறைச்சாலை நிருவாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் ஒரு பகுதியாக கைதிகள் சிலர் எயிட்ஸ் ஒழிப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி சிறைச்சாலையின் வெளிப்பகுதியை சுற்றி ஊர்வலமாக சென்றனர்.
இதனை தொடர்ந்து எயிட்ஸ் தொடர்பாக வைத்தியர் ஜயந்த சிறிவர்தனவினால் கைதிகளுக்கு விஷேட உரை ஒன்று சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நீர்கொழும்பு கைதிகள் நலன்புரி சங்கத்தின் முக்கியஸ்தர்களான தலைவர் சிறிவர்தன, உதவித் தலைவர் விஜேகோன், செயலாளர் அருள்ராஜ், பொருளாளர் நிஹால் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் முதலாம் திகதியாகும்.







0 comments:
Post a Comment