(துருவத்திற்காக சம்யா)
வைத்தியசாலைகள் நாடுமுழுவதும் பரந்து காணப்படுகிறன. அரசின் இலவச சுகாதார சேவைத் திட்டத்தின்கீழ் வருடந்தோறும் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து நாட்டு மக்களின் தேகாரோக்கிய சுகநலம் சரியான முறையில் பேணப்படவேண்டும் என்பதற்காக வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் சென்று நோய்க்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவர். ஆனால், கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள் சரியான முறையில் வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்படுவதில்லை என்கின்றனர் நோயாளிகள்.
அண்மையில் அங்கு கடமையாற்றும் டாக்டர் ஒருவரிடம் தனியார் வைத்தியசாலையில் பணம் கட்டி சனலிங் செய்தபின்னர் ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பலநாட்கள் வாட்டில் இருந்தும் உரிய நோய்க்கான மருந்துகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை, நோயும் நின்றபாடில்லை இது சம்பந்தமாக அங்குள்ள மருத்துவத் தாதிகளிடம் கேட்டால், உங்களைப் பார்த்த டாக்டர் லீவில் நிற்கிறார் என்கிற பதில்தான் வருகிறதாம்.
ஒரு டாக்டர் இல்லாவிட்டால் வேறு டாக்டர் கொண்டு பார்க்க முடியாதா என்ன? இலவச வைத்தியசாலைகள் என்கிற பெயர்தான் ஆனால் அனைத்துப் பரிசோதனைகளும் வெளியே பணம் கொடுத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நோயாளர்கள் உட்படுகின்றனர். காரணம் கேட்டால் கொழும்புக்கு அனுப்பினால் உரிய நேரத்திற்கு வராதாம் என்கின்றனராம் தாதிகள்.
எனவே, நோயாளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு செல்வதானால் பணத்துடன்தான் செல்ல வேண்டும். இலவசம் என்ற பெயர்தான் மிச்சம். பிரதேசத்திற்குப் பிரதேசம் வைத்தியசாலைகள் பல உண்டு. பயன்தான் குறைவு. அனைத்து வசதிகளும் இருக்கும்படி ஒருவைத்தியசாலை இருந்தாலே போதும். பெயருக்கு வைத்தியசாலைகள் இருப்பதால் என்ன பிரயோசனம். இன்று நோய்வந்தால் தனியார் வைத்தியசாலைகளில்தான் சிகிச்சைபெற வேண்டிய கட்டாயத்திற்கு இன்று இலங்கையின் சுகாதார சேவை மாறிக்கொண்டு வருகின்றதா? என அந்த நோயாளி குமுறுகின்றார்.

0 comments:
Post a Comment