(நமது செய்தியாளர்)
இன்று செவ்வாய்க்கிழமை ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஒரு புதுவித அனுபவம் ஏற்பட்டது. அதாவது இன்று காலை சுமார் 10.00 மணியளவில் தென்கிழக்குப் பிரதேசம் முழுவதும் வானமே இருண்டு மழைபொழிய ஆரம்பித்தது. அவ்வேளை கடுமையான இருள் சூழ்ந்திருந்தது.
இதனால், பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு, அதிலும் அடைக்கப்பட்ட வகுப்பறைகளுக்குள் எழுதிய மாணவர்களுக்கு பரீட்சை எழுத முடியாமல் இருளில் திண்டாடிப் போயினர். அவ்வேளை அங்கிருந்து பரீட்சைக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் மின் பல்பை போடுமாறு கோரியபோதிலும் அவர்கள் பல்ப்பை போடவில்லை.
சுமார் ஒரு மணித்தியாலயமாக கடுமையான இருளில் எதுவும் விளங்காது எழுதமுடியாது மிகவும் மாணவர்கள் திண்டாடியிருகின்றனர். இதனையும் இந்த அதிகாரிகள் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றார்கள்.
பாடசாலையிலுள்ள மின்சாரம் எதற்கு இருக்கிறது? ஒரு வகையில் இவர்களைப் பார்த்தால் அரசுக்கு மின்சாரத்தை மீதப்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள் போலும். இது நடைபெற்றது தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நிலையத்தில். இந்தக் கஷ்டத்தை அனுபவித்த மாணவர்கள் எமது துருவம் இணையத்தளத்திற்கு அறிவித்திருந்தார்கள்.
இனிமேலாவது மாணவர்களின் நலனிலும் கொஞ்சம் அக்கரையாக இருங்கள் சேர்..!
0 comments:
Post a Comment