கடந்த சில வாரங்கள் வெறிச்சோடிக்கிடந்த வானம் தற்போது அடைமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மீண்டும் வெள்ளம் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தென்கிழக்குப் பிரதேசம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வானிலை அவதான நிலையம் இன்று அதிக மழை பெய்யும் எனவும், காற்றுடன்கூடிய காலநிலையும் இடிமுழக்கம் என்பனவும் காணப்படும் என்று அறிவித்திருந்தாலும் அமைதியான மழை தொடர்ந்து பெய்ந்து கொண்டே இருக்கிறது.
இன்று காலை தொடக்கம் மாலை வரை தொடராக மழை பெய்த வண்ணமே காணப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த கனத்த மழையினால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போதைய மழை மீண்டும் விவசாயிகளின் வேளாண்மைக்கு பலத்த நஷ்டத்தை தோற்றுவிக்கும் அறிகுறிகள் தென்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெற்பயிர் இனிவரும் காலங்களில் குடலைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் தொடராக மழை பெய்யும் பட்சத்தில் நெற்கதிர்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் இத் தொடர்மழை விவசாயிகளின் வயிற்றில் பாரிய இடியாகவே காணப்படுகிறது.

0 comments:
Post a Comment