
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கடலில் இயந்திரப் படகிலிருந்து வீழ்ந்த மீனவரொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கல்ல பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜீ.பி.எச.சுஜிபியந்த (வயது 42) என்பவரே சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18 நாட்களுக்கு முன்னர் இயந்திரப் படகில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்ததாகவும், ஆழ்கடல் பகுதியில் தற்போது ஏற்பட்டு வரும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் தங்கல்ல பகுதியை நோக்கிச் செல்ல முடியாமல் ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை பிரதேசத்தில் கரையொதுங்கியதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, படகிலிருந்த குறித்த மீனவர் திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து வாழைச்சேனை பிரதேச மீனவர்களின் உதவியுடன் இவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை பிரதேச பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment