Tuesday, December 20, 2011

மீனவர்களின் 10 இலட்சம் கையெழுத்துகளை பெறும் வேலைத்திட்டம்


(கலாநெஞ்சன்) 
கடற்றொழில் துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மீனவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பாகவும் மகஜர் ஒன்றில் 10 இலட்சம் கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று இன்று நீர்கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன்பிடிச் சந்தை முன்பாக நேற்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து பெறும் வேலைத் திட்டத்தை 'மீன்பிடித் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேசிய மீனவர் கூட்டமைப்பு' ஏற்பாடு செய்திருந்தது.

வடக்கு, கிழக்கு கடற்பகுதியில் இந்திய மீன்பிடி ரோலர் படகுகள் மேற்கொள்ளும் சட்ட விரோத மீன் பிடித்தலையும் இலங்கை மீனவர்களின் மீன் வலைகள் அவர்களின் ரோலர் படகுகளினால் சேதமாகுதல் உட்பட மேலும் பல விடயங்களை குறிப்பிட்டே இந்த மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேசிய மீனவர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நாமல் பெர்னாந்து தெரிவித்தார்.






0 comments:

Post a Comment