Thursday, December 29, 2011

ஏ.ஆர். ரஹ்மான் யாழ்ப்பாணதுக்கு வருவார் - பற்குணராஜா


யாழில் இந்திய கலாசார மையம் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் யாழ். மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகத்தில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட 10ஆவது கூட்டத்தொடர் வியாழக்கிழமை நடைபெற்றபோது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் பரதிபலிக்கும் வகையில் இந்தியக் கலாசார மையம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் சபையில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment