Thursday, December 29, 2011

இலங்கை சனத்தொகை 2 கோடி; செல்போன்கள் 2 கோடி 10 இலட்சம்


இலங்கையில் உள்ள சனத்தொகை சுமார் 2 கோடி. ஆனாலும் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான செல்போன்கள் பாவனையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஒருவரிடம் இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட செல்போன்கள் பாவனையில் உள்ளதாகவும் கையடக்கத் தொலைபேசியின் மூலம் தினமும் நீண்ட நேரம் கதைப்பதனாலேயே புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது புற்றுநோய் அதிகரிப்பிற்கு அதிகரித்த தொலைபேசிப் பாவனையே காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலமே இத் தரவினை வெளியிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையும் விட நாட்டில் இடம்பெற்று வருகின்ற ஊழல் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் பெரும்பாலானவற்றிற்கும் மற்றும்வாகன விபத்துக்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுளள்ளார்.

0 comments:

Post a Comment