
(சம்யா)
அட்டாளைச்சேனையிலுள்ள அரச வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய கட்டிடம் ஒன்றிற்காக அடிக்கல் நடப்பட்டு, அத்திவாரமிடும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அத்திவாரமே அறைகுறையாக காட்சியளிக்கின்றது. இதனால் கம்பிகள் துருப்பிடித்துள்ளதையும், தோண்டப்பட்ட மண் குவிக்கப்பட்டிருப்பதையும் இங்கு காணலாம்.
நிதியை ஒதுக்கினாலும் உரிய காலப்பகுதிக்குள் கட்டி முடிக்கப்படாமை யாருடைய குறைபாடு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேவேளை, கட்டிடப் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணம் திரும்பி விட்டதனால்தான் கட்டிடம் அறைகுறையாக காணப்படுவதாக அங்குள்ள ஊழியர் ஒருவர் துருவத்துக்கு தெரிவித்தார்.






0 comments:
Post a Comment