Saturday, December 24, 2011

கல்விச்சாலை நினைவலைகள்


வெள்ளை சீருடையில்
வேண்டாத துயரின்றி
துள்ளித் திரிந்த காலமது
தவமிருந்தாலும் தேடிவருமோ!

வாதங்களை முன்வைத்து
விளையாட்டாய் விவாதிப்போம்!
பாடங்களின் ஐயங்களை
பரஸ்பரமாய் தீர்த்திடுவோம்!

சண்டைகள் நாமறியோம்!
சமரசமாய் வாழ்ந்து வந்தோம்!
சாதனைகள் படைப்போம என
சங்கற்பம் பூண்டிருந்தோம்!

கவனத்தை ஒன்றாக்கி
கல்வியிலே செலுத்தி நின்றோம்!
கவலைகள் கிஞ்சித்தும்
காணாமல் வலம் வந்தோம்

கபடமில்லா நெஞ்சுடன்
சகபாடிக் கூட்டத்துடன்
கூடிக்களித்த காலமது
கோடி கோடியாய் பணத்தை
கொட்டிக் கொடுத்தாலும்
மீண்டு வருமோ மீண்டும்!

- நைலூபா ஜுனைதீன், புத்தளம்

0 comments:

Post a Comment