Wednesday, December 21, 2011

நாவிதன்வெளி சிறுவர் கழகங்களின் வருடாந்த ஒன்றுகூடல்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
வேர்ல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகின்ற நாவிதன்வெளி பிராந்திய சிறுவர் கழகங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சிறுவர் ஒன்றுகூடல் இறுதி நாள் ஒன்றுகூடல் நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு சொறிக் கல்முனை ஹொலிகுரோஸ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

சாளம்பைக்கேணி மிஃறாஜ் சனசமூக அமைப்பின் தலைவர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் அன்ரனி சுரேஸ், சிறுவர் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கல்முனை பிராந்திய அலகு பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார், மௌலவி ஏ.எல்.காலிதீன் உட்பட சமூக மட்ட குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் மத்தியமுகாம்-02 ராஜகிரீடம் சிறுவர் கழகம், சாளம்பைக்கேணி-05 மிஃறாஜ் சிறுவர் கழகம், சொறிக்கல்முனை-02 பாரதி சிறுவர் கழகம் என்வற்றின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் சிறுவர்களின் குழுப்பாடல், பேச்சு, கவிதை, நாடகம் என்பனவும் இடம்பெற்றன. இறுதியில் நத்தார் தாத்தா கலந்து கொண்டு சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments:

Post a Comment