Wednesday, December 21, 2011

‘ஹவுஸ் ஒப் இங்கிலிஸ்' மாணவர்களின் விடுகைவிழா


(றிஸான் முகம்மட்) 
‘ஹவுஸ் ஒப் இங்கிலிஸ்' அட்டாளைச்சேனை கிளை ஆங்கில முன்பள்ளி மாணவர்களின் விடுகைவிழா நிகழ்வுகள் அண்மையில் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய சாலிஹா மண்டபத்தில் நடைபெற்றன. ‘ஹவுஸ் ஒப் இங்கிலிஸ்' முகாமைத்துவப் பணிப்பாளர், ஆசிரியர் ஏ.ரி.நக்கீல், தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி என்.கே.எம். இப்றாஹிம், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஸாக், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, சிறார்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. ஒருவருட முன்பள்ளிக் கல்வியை நிறைவுசெய்த மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment