
டர்பன் டெஸ்டில், சங்ககரா சதம் அடிக்க, இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 338, தென் ஆப்ரிக்கா 168 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில், ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணிக்கு, பரணவிதனா (9), ஜெயவர்தனா (14) மீண்டும் ஏமாற்றினர். பின் இணைந்த சங்ககரா, சமரவீரா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சமரவீரா 43 ரன்களில் வெளியேறினார். சங்ககரா (108) சதம் கடந்து திரும்பினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து 426 ரன்கள் முன்னிலை பெற்றது. பெரேரா, ஹெராத் அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
0 comments:
Post a Comment