
மேற்படி இந்த போலிச் செயற்பாட்டைச் செய்தவரைக் கைது செய்வதற்காகக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அவர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கள் மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் விசேட சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார் யாழ் அரச அதிபர்.
தன்னுடைய காணியை தான் இறந்துள்ளதாக தெரிவித்து தனது சகோதரியின் கணவன் போலி பத்திரங்கள் தயாரித்து தனது காணியை இலங்கை வங்கியில் ஈடுவத்து பணம் பெற்ற மோசடி நபரை கைது செய்யுமாறு காணிக்கு சொந்தக்காரர் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனக்கு தெரிவித்தாக அரச அதிபர் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக வெளிநாடுகளில் வாழ்பவர்களின் சொத்துக்களை அவர்களது உறவினர்கள் அபகரிக்க முயலும் சம்பவங்கள் அதிரித்துள்ளதாகவும், தாய்நாட்டில் உள்ள சொத்து விடையங்களில் புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறும் தாம் கோட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment