அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மாணவனான, அக்கரைப்பற்று – 06ஐச் சேர்ந்த ஆரிபீன் - நறுபா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அதீப்ஷாஹ் இம்முறை 2011இல் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உயர்புள்ளி (157) பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவரை வாழ்த்தி அண்மையில் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர்களால் மற்றும் பெற்றோர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் புலமையாளர்களை வாழ்த்தும் விழாவில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா வாழ்த்தி வாழ்த்துப் பத்திரம், பரிசுகள் போன்றவற்றை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஸெய்க். ஏ.எல். முகம்மது காசீம், பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.ஏ. ஜவாத் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவன் அதீப்ஷாஹ்வை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ நாமும் வாழ்த்துவோம்.
(தகவல்: எஸ்.எல். மன்சூர்)
0 comments:
Post a Comment