(பாத்திமா ரினோஸா)
கீரியங்கள்ளி ஆனமடு வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த இருவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை பதுளுஓயா முஸ்லிம் மையவாடியில் நடைபெற்றது.
ஆனமடுவவிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு கீரியங்கள்ளி ஆனமடு வீதி ஊடாக புத்தளம் சிலாபம் பிரதான பாதையை நோக்கி சென்ற கொண்டிருந்த டிப்பர் வாகனத்திற்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற கொண்டிருந்த இருவர், டிப்பர் வாகனத்தை முந்த முயசித்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் சென்ற பத்துளு ஓயாவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை முஹம்மது பஸ்லி (வயது 31), முஹம்மது பர்மிளாஸ் (வயது 30) இருவருமே விபத்தில் மரணமடைந்தவர்களாகும். பிரேத பரிசோதனை சிலாபம் வைத்தியசாலையில் இடம் பெற்றது.
டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment