
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக கல்லோயா திட்டத்தின் பிரதான குளமான டி.எஸ். சேனநாயக சமுத்திரத்தின் பிரதான வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நில் த சில்வாவின் பணிப்புரையின் பேரில் நீர்பாசன திணைக்கள அதிகாரிகளால் இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
டி.எஸ். சேனாநாயக சமுத்திரம் நிர்மாணிக்கப்பட்டு சரித்திரத்திலேயே ஒரு வருடத்திலேயே இரண்டாவது தடவையாக இந்த பிரதான வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் ஏரல் சந்தன தெரிவித்தார். இதுவரை டி.எஸ். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 105.2 உயரம் வரை நிரம்பி இருந்தது.
இது 6,77,200 ஏக்கர் அடிக்கு சமனானது. வான் கதவு திறந்த பின்னர் ஒரு செக்கனுக்கு 528 ஏக்கர் அடி நீர் குறைந்தது. டி.எஸ். சேனநாயக சமுத்திரத்திலிருந்து வெளியேறிய நீரினால் அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலுமுள்ள ஆறுகள் பெருக்கெடுத்ததுடன் குளங்களும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. இதனால் பள்ளமான பிரதேசங்களிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரி சமன் வீரசிங்க தெரிவித்தார்.
0 comments:
Post a Comment