
யாழ்ப்பாணம் கொம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கமலகண்ணன் கமலவாசன் இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர பெறுபேறுகளில் 3.1167 இஸட் ஸ்கோரைப் பெற்று அகில இலங்கை ரீதியில் கணிதத் துறையில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள கொம்மாந்துறை கம்பன்மனை வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை தொடர்ந்த கமலவாசன் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ, பி. சித்தியுடன் உயர்தரத்திற்கு தெரிவானார்.
அதனைத் தொடர்ந்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் தனது உயர்தரத்தை தொடர்ந்த கமலவாசன் கணிதத் துறையில் 3ஏ சித்தியைப் பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியில் கணிதத் துறையில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். தனது வெற்றி குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைக் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தவறாது பாடசாலைக்கு சமூகம் தர வேண்டும். அத்துடன் பாடசாலையில் ஆசிரியரினால் வழங்கப்படும் பயிற்சிகளை பலதடவைகள் செய்து பார்க்க வேண்டும்.
நான் 5.00 மணி முதல் கல்வி கற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் மாலையில் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் வீட்டுப் பாடங்களில் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்த கமலவாசன்,
ஆசிரியரின் வழிகாட்டலுடன் வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்ல வேண்டும். அத்துடன் பாடசாலையில் வழங்கப்படும் பயிற்சிகளை தவறாது செய்து பார்ப்பதுடன் கற்றதை மீளாய்வு செய்வது மிகவும் அவசியம். இதுவே சக மாணவர்களுக்கு வழங்கும் படிப்பினையும், வெற்றியின் இரகசியம் எனவும் கமலவாசன் தெரிவித்தார். கமலவாசனின் தந்தை தற்போது டுபாயில் உள்ள பிரபல கம்பனியில் சிவில் பொறியியலாளராக தொழில்புரிந்து வருகிறார். தாயார் பெயர் மதிவதனா. குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்த கமலவாசன், தனது மூத்த சகோதரி மொரட்டுவை பல்கலைக்கழ கத்தில் மருத்துவ பீட மாணவியாக கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment