Saturday, December 31, 2011

கோபாலபுரம் கிராமத்தில் மின்சாரத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
அரசின் 'விதுலமு லங்கா' தேசிய வேலைத்திட்டத்தின் 4 மில்லியன் ரூபா செலவில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின்சாரத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.பிள்ளையான் தம்பி தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் ஸ்தாபக தவிசாளர் திரு சின்னத்துரை, வேல்ட்விஷன் திட்ட இணைப்பாளர் அன்டனி றஜீஸ், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம், பிரதேச சபை உறுப்பினர் ஏ.அப்துல் சமட் உட்பட கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மின்சார சபை உத்தயோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இன்றுடன் இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினத்துக்கு அப்பிரதேச மக்களால் பொன்னாடை போத்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





0 comments:

Post a Comment