Monday, December 12, 2011

இலங்கை - இந்தியா விமான சேவை மேலும் விஸ்தரிக்கப்படுகின்றது


(கலாநெஞ்சன்) 
ஸ்ரீ லங்கன் விமான சேவை தமது விமானப் பயணங்களை விஸ்தரித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் விரிவுபடுத்தப்படும் வகையில் தற்போது மேற்கொள்ளப்படும் விமான சேவைகளுக்கு மேலதிகமாக மேலும் நான்கு விமான சேவைகளை நடாத்த ஸ்ரீ லங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் இந்தியாவின் சென்னை நகருக்கும், பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்குமான விமான சேவைகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த நகரங்களுக்கிடையிலான விமான சேவைகள் 28 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இலங்கை - இந்திய பொருளாதார சுற்றுலா உறவுகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவிக்கிறது.  அடுத்த ஆண்டு முதல் காத்மண்டு மற்றும் டாக்கா ஆகிய நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment