(எப்.எம்.முர்தளா)
அக்கரைப்பற்று அந்-நூர் முன்பள்ளி இஸ்லாமிய பாடசாலையின் விடுகை விழா கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளிகளின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல். இப்றாஹிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஏ.அர்.ஏ. ஜவாத், ஆசிரியர் எம்.ஐ.எம்.மக்கீன் மௌலவி உட்பட மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment