Sunday, December 18, 2011

அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை


நேற்று சனிக்கிழமை இரவு அநுராதபுரம், எப்பாவெல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 49 வயதுடைய தாய், அவருடைய சகோதரி (55 வயது), 23 வயதுடைய அவரது மகள் மற்றும் மகளின் கணவன் (23 வயது) ஆகிய நால்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் பனாகொட இராணுவ முகாமில் சேவை புரிந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, எப்பாவெல பகுதியில் அண்மையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் தூக்கிட்டு மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அச்சம்பவத்திற்கும் இக்கொலைச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment