Saturday, December 17, 2011

கணவருக்கு ஒரு அறை விட்டால் 1,000 ரூபா பரிசு ; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு


"உங்கள் கணவர் குடித்து விட்டு வந்து, உங்களை அடிக்கிறாரா? நீங்கள் அவரைத் திருப்பி அடியுங்கள். உங்கள் கணவரின் கன்னத்தில் ஒரு அறை விட்டால், உங்களுக்கு 1,000 ரூபா பரிசு தருகிறேன். 10 அறை கொடுத்தால், 10 ஆயிரம் ரூபா பரிசு நிச்சயம். அதுவும், பலர் கூடி நின்று பார்க்கும் போது அறைய வேண்டும்" இப்படி கூறியிருப்பவர் யார் தெரியுமா? இந்தியாவின் ஆந்திரா மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் வெங்கடேஷ். 

கணவர்கள் மீது, ஏன் இவருக்கு இத்தனை கொலை வெறி...' என கேட்கத் தோன்றுகிறதா? அதற்கும் பதில் வைத்துள்ளார், இந்த அமைச்சர். "ஆண்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால், குடித்துவிட்டு வந்து, தங்களது மனைவிகளை அடித்து, உதைக்கும் கணவர்கள்மீது தான், கடும் கோபம் வருகிறது. இதுபோன்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே, இப்படி ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளேன். இதனால், வேலையை முடித்து மதுக் கடைகளுக்கு செல்வதற்கு பதிலாக மனைவிக்கு பயந்து வீட்டுக்கு வந்து விடுவர்' என்கிறார். 

அமைச்சரின் கர்னூல் தொகுதியில் உள்ள பெண் களுக்கு மட்டும்தான், இந்த திட்டம் பொருந்துமாம். மாநில அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும் என்பது அமைச்சரின் எதிர்பார்ப்பு. இந்த 'அறைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு' திட்டத்தால், இப்போதெல்லாம், கர்னூல் தொகுதியில் உள்ள குடிமகன்களுக்கு மனைவியை கண்டாலே உதறுகிறதாம்.

0 comments:

Post a Comment