Wednesday, December 14, 2011

நடிகைகளின் பஞ்சு முடிக்கு பீர் அபிஷேகம்


கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, இன்று அநேக நடிகைகள் இந்த பீர் அபிஷேகத்தைதான் விரும்புகிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டிலாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீர் அபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு முடிக்கு இந்த பீர்தான் காரணமாம்.

நமது பெண்களும் இதைப் பார்த்து முயற்சி செய்தால் 'துருவம்' பின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்காது. 

0 comments:

Post a Comment