
(சம்யா)
அண்மையில் பெய்த பெருமழையின் பின்னர் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்குப் பிரதேசத்தில் மழை விட்டாலும் இரவு நேரங்களில் அதிக பனி பொழிவதுடன் கடுமையான குளிரும் ஏற்பட்டுள்ளது. பகற்காலங்களிலும் இந்நிலை தொடர்கிறது. இதனைப் பார்க்கின்றபோது நுவரெலியா போன்று தென்கிழக்குப் பிரதேசம் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வகையான காய்ச்சல், தடுமல், இருமல் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இதய மற்றும் சுவாச நோயுடையவர்களுக்கு அதிக பாதிப்பை இப்பனிப்பொழிவு ஏற்படுத்திவருவதாகவும் கூறப்படுகின்றது. நெற்பயிரிலும் புதுவகை நோய்த்தாக்கங்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்பட்ட தேனி எனப்படுகின்ற சூறாவளி தற்போது இந்தியாவை நோக்கி நகர்வதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கிழக்கில் கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் மீனுக்கான விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment