Wednesday, December 28, 2011

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றத்தில் தலையிடவில்லை - ஈராக் தூதுவர்


(சம்யா) 
கடந்த பல வாரங்களாக ஏறாவூரிலுள்ள சதாம் ஹுசைன் குடியேற்றக் கிராமத்தின் பெயர் தொடர்பாக அதன் பெயர் மாற்றத்தில் ஈராக் தூதுவராலயம் தலையிடவில்லையென இலங்கைக்கான ஈரான் தூதுவர் கஃதான் தாஹா தெரிவித்துள்ளார். அண்மையில் அக்கிராமத்திற்கு விஜயம்செய்து அங்குள்ள மக்களை சந்தித்து, நாம் அவர்களுக்கு உதவி செய்துள்ளோம்.

ஈராக் மக்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இக்கிராமம் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசையின் காலத்தில் கட்டுப்பட்டதாகும். இருப்பினும் பிரதேச அரசியல்வாதிகளே இக்கிராமத்தின் பெயர் குறித்து சர்ச்கைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இக்கிராமத்தின் பெயர் ஈராக் கிராமம் என்று ஏலவே மாற்றம் பெற்றுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் அவர்களினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஈராக் தூதுவர், பெயர்மாற்றம் குறித்து தாம் எதுவிதமான கருத்துக்களையும் குறிப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார்.  இது இவ்வாறிருக்க அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் பெயர் மாற்றப் படக்கூடாது என மாகாண அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment