Wednesday, December 14, 2011

இரண்டாவது நாளாகவும் புத்தளத்தில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


(நிதால்) 
உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைக்கப் பெற்றுள்ள மலசல கூடங்களை புத்தளம் மக்களுக்கும் பெற்றுத் தருமாறு கோரி இன்று இரண்டாவது நாளாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மலசல கூடங்கள் கிடைக்கப் பெறாத மக்கள் புத்தளம் நகரசபை தலைவரும் புத்தளம் தொகுதி ஸ்ரீ.ல.சு. கட்சி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸிடம் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த திட்டம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக அவர்கள் பாயிஸிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக புத்தளம் மாவட்ட செயலாளருடன் பேசுவதாக பாயிஸ் அவர்களிடம் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment