Monday, December 12, 2011

பகல் வேளைகளில் கொள்ளை யிட்ட இளைஞர்கள் கைது


மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்து பகல் வேளையில் மாலை, கையடக்கத் தொலைபேசிகளைப் பறித்துச் சென்ற ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மட்டக்களப்புப் பொலிஸார் கைதுசெய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி 19ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இல.520, பிரதானவீதி ஓட்டமாவடியைச் சேர்ந்த முகமட் இப்ராஹிம் அஸ்மீர் (19) என்ற இளைஞனை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்ததனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின்போது மற்றைய சந்தேகநபரான மீராவேடை-04 ஓட்டமாவடியைச் சேர்ந்த ஹக்கீம் முகமது றிஸ்கான் (18) என்பவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் இவர்களிடமிருந்து  இரண்டு தங்கமாலை மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் மீட்டுள்ளதுடன் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதியில் அமைந்துள்ள இரு நகைக்கடைகளில் விற்பனை செய்த நிலையிலேயே இரண்டு மாலைகளும் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் வீதியில் செல்பவர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசி, தங்க மாலைகளை போன்றவற்றை பறித்துச்செல்வதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மட்டக்களப்பு பொலிஸில் இது தொடர்பாக 6 முறைப்பாடுகள் பதிவு செய்யபட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கமைய மட்டக்களப்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நவரட்ண பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் சார்ஜன் சி.சபேசன் (16469) தலைமையில் சார்ஜன் சேனாரெத்தினா, பொலிஸ் கோஸ்தா புவிச்சந்திரன் குழுவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பெயரில் குறித்த கொள்ளையில் ஈடுபட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர். 

0 comments:

Post a Comment