Monday, December 12, 2011

பணிப்பெண்களின் வயதெல்லை முப்பதாக அதிகரிப்பு ; அமைச்சர் டிலான் பெரேரா

(எஸ். எல். மன்சூர்)
இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநயக்கா எழுப்பி கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரித்துறை அமைச்சரான டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் வேலைவாய்ப்புக்காக செல்கின்ற பெண்களின் வயதெல்லையானது 18ஆகவும் பின்னர் 21ஆகவும் உயர்த்தப்பட்டதை நினைவுபடுத்திய அமைச்சர் தற்போது வேலைவாய்ப்புக்காகச் செல்லும் பெண்களின் வயதை முப்பதாக அதிகரிக்க இருப்பதாகவும பாராளுமன்றில் தெரிவித்தார். 

மேலும், வேலைவாய்ப்பினை மேற்கொள்கின்ற ஏஜென்சிகளின் தரம் பிரிக்கும் நடவடிக்கைகளையும்  மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு முகவர் நிலையங்களின் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment