
(கலாநெஞ்சன்)
நுவரெலியாவில் பொது போக்குவரத்து சேவையை செயற்திறனுடன் முன்னெடுக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வெற்றிடங்களுக்கென நுவரெலிய பிரதேசத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் குமார வெல்கம தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் போக்குவரத்து அமைச்சில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமன கடிதங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன, புகையிரத பொது முகாமையாளர் பி.ஏ.பீ. ஆரியரட்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment