Tuesday, December 20, 2011

தாஜ்மஹாலில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி


ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தி பட பாடல் கேசட் வெளியீட்டு விழா தாஜ்மஹாலில் நடக்கிறது. அங்கு அவர் இசை நிகழ்ச்சியும் நடத்தவுள்ளார். சிம்பு, த்ரிஷா ஜோடியாக நடித்த படம் ‘விண்ணை தாண்டி வருவாயா' கவுதம் மேனன் இயக்க¤னார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இப்படம் இந்தியில் ‘ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பிரதீக், எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்கும் இப்படத்துக்கும் ரஹ்மானே இசை அமைக்கிறார்.


காதல் கதை என்பதால், பாடல் வெளியீட்டு விழாவை காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகாலில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இது குறித்து கவுதம் மேனன் கூறும்போது, ‘தாஜ்மகாலில் பாடல் கேசட் ரிலீஸ் செய்யப்படுகிறது. அப்போது ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் பிரதீக், எமி ஜாக்ஸனின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது' என்றார்.

0 comments:

Post a Comment