Friday, December 23, 2011

சம்மாந்துறையில் பாடசாலை மாணவி சுருக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் 02ஆம் பிரிவில் கைகாட்டி சந்தியில் வசிக்கும் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் முத்து முஹம்மட் ஜஹான் (வயது 21) என்ற மாணவி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக் கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு பின்னரே இடம் பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்  இம்மாணவி பிரத்தியோக வகுப்புக்கு சென்று 5.15மணியளவில் வீட்டுக்கு வந்ததை அயலில் உள்ளவர்கள் கண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மாணவியின் தந்தை முத்து முஹம்மட், மாமா செய்யது என்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் மாமா செய்யது என்பவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளதுடன் தந்தை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சட்ட மருத்துவரின் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்காக சடலம் அம்பாரை பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றணகல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.முஸ்தபா உட்பட பலர் வருகை தந்தனர்.

0 comments:

Post a Comment