Friday, December 23, 2011

அல்ஹைதா நபர் பற்றிய தகவல் வழங்குவோருக்கு 10 மில்லியன் டொலர்கள்


அல்ஹைதா அமைப்பின் முக்கிய ஏற்ப்பாட்டாளர் மற்றும் நிதி தொடர்பான விடயங்களை கையாளும் நபர் பற்றிய தகவல்களை வழங்குபவருக்கு 10 மில்லியன் டொலர்கள் சன்மானமாக வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.

குறித்த நபர் தனது செயற்பாடுகளை ஈரானிலிருந்தே மேற்கொள்வதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஈரானின் எல்லைப் பகுதியிலிருந்து அல்ஹைதா அமைப்பின் ஏற்ப்பாட்டாளர் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. முதற் தடவையாக பயங்கரவாத நிதியாளர் ஒருவரை இலக்கு வைத்து சன்மானத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த நபர் ஈரான் அரசாங்கத்திற்கு உதவி செய்து வருவதுடன் அல்ஹைதா அமைப்பினரின் செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதேவேளை அல்ஹைதா அமைப்பைச் சேர்ந்தவர்களில் தேடப்பட்டு வரும் முக்கிய 5 நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment