Wednesday, December 14, 2011

எதிர்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் இல்லை


எதிர்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஸ் குணவர்த்தன இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் போது எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஐதேக தலைவர் ஆகியோருக்கு வெவ்வேறாக நிதி ஒதுக்க வேண்டி வருமென்றால் அது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்குமாறு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்தபோதே எதிர்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென எதிர்கட்சித் தலைவர் கூறினார்.

0 comments:

Post a Comment