Wednesday, December 14, 2011

இலங்கை அரசு கட்டாருக்கு கற்பிட்டியில் 500 ஏக்கர் காணியை வழங்கியது


கற்பிட்டியில் 5 தீவுகளில் உள்ள 500 ஏக்கர் காணியை, இலங்கை அரசு கட்டாருக்கு வழங்கவுள்ளது. இதில் சுற்றுலாக் கிராமமொன்று உருவாக்கப்படவுள்ளது. பல வகையான அபிவிருத்தித் திட்டங்களை இது உள்ளடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வந்துள்ள கட்டார் பிரதமர் ஷெய்க் அஹமத் பின் ஜாஸிம் பின் ஜப்ர் அல்-தானி, நிதியமைச்சர் யூஸுப் ஹுஸைன் கமால் ஆகியோர் அடங்கிய தூதுக் குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோரை பல தடவை சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு தரப்புப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று கூறியுள்ளார். சுற்றுலா, வான் போக்குவரத்து, கொழும்பு பங்குச் சந்தை, மீன்பிடித் துறை உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment