Monday, December 12, 2011

சுமுகமாக நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை

(எஸ்.எல். மன்சூர்)
இன்று தென்கிழக்குப் பிரதேசங்களில் நடைபெற்ற முதல்நாள் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை மிகவும் சுமுகமாக நடைபெற்றதாக பரீட்சை மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை தபால் அறிமுக அடையாள அட்டை கொண்டுவந்த பரீட்சார்த்திகள் அதனை போட்டோபிரதி எடுத்து உரிய அதிகாரிகளின் கையொப்பத்தை பெற்று பரீட்சை மேற்பார்வையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வெளிப்பரீட்சார்த்தியாயின் கிராமசேவகர், பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒப்பம் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment