Monday, December 12, 2011

ஆசிரியர் இடமாற்றம் அகரவரிசைப்படியா?

அண்மைக்காலமாக ஆசிரியர்கள் இடமாற்றம் சம்பந்தமான செய்திகள் பத்திரிகை, வானொலி மற்றும் இணையத்தளங்களில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆசிரியர்களது இடமாற்றம் சம்பந்தமான உயர்மட்ட நடவடிக்கைகள் எதுவும் கவனிக்கப்படாத நிலையில் தொடர்ந்து ஆசிரியர்களது போராட்டங்களும், கவனக்கலைப்பான் அமைதிப்பேரணிகளும் நடைபெற்று வரும் நிலையில் பாரபட்சம் காட்டுதல், புள்ளிகள் கவனத்திற்கொள்ளப்படாமை போன்றவற்றுக்கும் மத்தியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் வித்தியாசமானதொரு முறையில் ஆசிரியர் இடமாற்றம் நடைபெற்றுள்ளதாக இடமாற்றத்திற்குட்பட்ட அந்த ஆசிரியர் ஒருவர் துருவத்திற்கு தெரிவித்துள்ளார்.

அதாவது அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து இம்முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் சரியான திட்டமிட்ட அடிப்படையில் அமையவில்லை எனக்கூறும் அந்த ஆசிரியர் தனது நிலையை உரிய அதிகாரியிடம் முறையிட்டபோது ஆசிரியர்களின் பெயர்களின் அகரவரிசைப்படியே (அல்பாபெற்றிக முறைமூலம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தன்னிடம் கூறினார் என அந்த ஆசிரியர் துருவ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், ஒரேகாலத்தில் ஒரேவகை நியமனத்தில் நியமிக்கப்பட்டுள்ள சில ஆசிரியர்களுக்கு இடமாற்றம் இல்லை சிலருக்கு இடமாற்றம் கிடைத்துள்ள நிலையில் பல ஆண்டுகள்  கஸ்டப்பிரதேசப் பாடசாலையில்; சேவையாற்றிய சில ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் கிடைத்துள்ளது. இவ்விடயங்களை கவனத்திற் கொண்டு மாணவர்களின் சிறப்பான கல்வி நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்காதவாறு இடமாற்றங்கள் நடைபெறுகின்ற அதேவேளை பாரபட்சமற்ற முறையில் அரச ஊழியர் என்ற அடிப்படையில் இடமாற்றம் இடம்பெறவேண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளல் சிறப்பானதாகும்.

(துருவ செய்தியாளர்)

0 comments:

Post a Comment