மொனராகலை மாவட்டத்தின் தம்பானை மற்றும் கொட்டியாகலை ஆகிய பிரதேசங்களில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக செவ்வாய்க்கிழமை நடத்த முடியாமல்போன க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையினை வேறொரு தினத்தில் நடாத்த தீர்மானித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
குறித்த இரு பிரதேசத்திலுமுள்ள பரீட்சை நிலையங்களிலும் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக செவ்வாய்க்கிழமையன்று பரீட்சையினை நடந்த முடியாமல் போயுள்ளது. இதனால் 42 ஆயிரம் மாணவர்கள் அன்றைய தினம் பாதிப்படைந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு குறித்த வினாத்தாளை வேறொரு தினம் நடத்த தீர்மானித்திருப்ப தாகவும் பரீட்சைக்கான தினம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
0 comments:
Post a Comment